செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By siva
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (12:26 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகையின் மகள்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகையின் மகள்?
கடந்த 80களில் கொடிகட்டி பறந்த கவர்ச்சி நடிகையின் மகள் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் தினமும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், வேல்முருகன், ஆஜித், கேப்ரில்லா, லட்சுமிமேனன், ஷிவானி நாராயணன், புகழ், ரக்சன் உள்பட பலர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகை அபிநயாஸ்ரீ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. இவர் நடிகை கவர்ச்சி நடிகை அனுராதாவின் மகள் என்பதும் விஜய்-சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது