வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (14:37 IST)

ஜிம்மில் ஹார்ட் வொர்க்… சமந்தா வெளியிட்ட லேடட்ஸ்ட் கிளிக்ஸ்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்க உள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படம் நவம்பர் மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் பின்னர் பிப்ரவரி 17 ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் படம் ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் இப்போது ஏப்ரல் 14 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சகுந்தலம் படம் 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது.  இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார் சமந்தா. இதற்கிடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.