செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (12:51 IST)

7 சகோதரிகளை வளர்த்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு சமந்தா கொடுத்த பரிசு!

7 சகோதரிகளை வளர்த்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு சமந்தா கொடுத்த பரிசு!
பெற்றோர் இல்லாததால் தனது ஏழு சகோதரிகளையும் தனது உழைப்பால் காப்பாற்றிய பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு சமந்தா கொடுத்த பரிசு அவரை இன்ப அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது பெற்றோர் இறந்த பிறகு ஏழு சகோதரிகளையும் தனது உழைப்பால் காப்பாற்றியுள்ளார். ஆட்டோ ஓட்டிய காசில்தான் அனைவரையும் படிக்க வைத்துள்ளார் என்பதும் குடும்ப செலவையும் கவனித்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் சமந்தா நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அந்த ஆட்டோ ஓட்டுனர் கலந்துகொண்டார். அப்போது அவர் தான் பட்ட கஷ்டத்தையும் தாய் தந்தை இல்லாததால் 7 சகோதரர்களையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு தன்மீது இருந்ததையும் நெகிழ்ச்சியுடன் கூறினார் 
 
இந்த நிலையில் தற்போது அவர் சமந்தா ரூபாய் 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கி அந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு பரிசாக வழங்கியுள்ளார். தற்போது அந்த காரை ஓட்டி தான் தனது குடும்பத்தினரை அவர் காப்பாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது