ஜெயிலர் 2 படத்துக்கு இடையே இந்த வேலையையும் செய்யவுள்ளாரா ரஜினி?
தமிழ் சினிமாவில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார்.
அந்த படம் வெற்றியடைய அடுத்து சிவகார்த்தியோடு டாக்டர் மற்றும் விஜய்யோடு பீஸ்ட் மற்றும் ரஜினியோடு ஜெயிலர் என அவர் கிராஃப் எகிறிக்கொண்டே செல்கிறது. இப்போது ஜெயிலர் 2 பட வேலைகளில் இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் தொடங்கும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள ஓல்ட் உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் மார்ச் 10 ஆம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஷூட்டிங்கில் முதல் கட்டமாக 15 நாட்கள் மட்டும் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளாராம். அதன் பின்னர் அவர் மூன்று மாதங்கள் ஓய்வெடுத்துக் கொள்ள உள்ளாராம். அந்த காலத்தில் அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதும் வேலையிலும் ஈடுபட உள்ளாராம்.