1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (15:54 IST)

யார் இந்த மதுரவாணி? இணையத்தை கலக்கும் பிரபலம்...

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. தமிழில் நடிகையர் திலகம் என்றும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் இரு மொழிகளில் படம் தயாராகியுள்ளது. 
தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். 
 
மேலும் சமந்தா, அனுஷ்கா, நாக சைதன்யா, பிரகாஷ்ராஜ், விஜய் தேவர்கொண்டா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சமந்தா பத்திரிகை நிருபராக நடிக்கிறார். 
 
இதில் சமந்தா மதுரவாணி என்ற கதபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது தோற்றம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரங்கஸ்தளம் படத்தி கிராமத்து பெண்ணாக நடித்து பாராட்டை வாங்கி சமந்தா. இந்த படத்திலும் வித்தியாசமாக காணப்படுகிறார்.
 
இதற்கு முன்னர், கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர் சல்மால் கெட்டப் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமந்தாவின் கதாபாத்திரமும் வைரலாகி வருகிறது.