1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 18 நவம்பர் 2017 (14:18 IST)

நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன செய்தார் தெரியுமா?

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து கடந்த 9ஆம் தேதி வெளியான 'அறம்' திரைப்படத்துக்கு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கும், படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் பாராட்டுகள்  குவிந்து வருகின்றன.

 
நயன்தாரா இன்று சினிமாவில் நம்பர் 1 ஹீரோயின். வரிசையாக படங்களை கொடுக்கும் இவர் தான் நினைத்தபடி தான் எப்போதும் நடந்துகொள்வார். இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு காதலர் விக்னேஷ் சிவனின் ஸ்பெஷல் பரிசு என்ன என்பதுதான்.
 
நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். அறம் இவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்ததுள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை தந்துள்ளது. இந்நிலையில் நயன்தாராவின்  பிறந்தநாளான இன்று விக்னேஷ் சிவன் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நயன்தாராவிற்கு பிறந்தநாள்  வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதில் நீ மிகவும் தைரியமானவள், அழகானவள் என்றும், உன்னைப் பார்த்து நான் எப்போதும் பெருமைப்படுகிறேன். உனக்கு மதிப்பு கொடுக்கிறேன். என் தங்கமே என கூறியுள்ளார்.