திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 மே 2021 (13:08 IST)

அஜித் படத்தின் ரீமேக்கில் சல்மான் கான்! ராதே தோல்வியால் எடுத்த முடிவு!

நடிகர் சல்மான் கான் அஜித்தின் வீரம் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் நீண்ட காலதாமதத்துக்குப் பின்னர் வெளியான ராதே திரைப்படம் படுகேவலமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் சல்மான் கான் மிகவும் அப்செட்டாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சல்மான் கான் அடுத்ததாக தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஏற்கனவே அக்‌ஷய் குமார் ரீமேக் செய்து நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்போது சல்மான் கான் அந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.