கொரோனா நிவாரண நிதி: சிம்பு பட நடிகை கொடுத்த ரூ.1 லட்சம்!
கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக இதுவரை நடிகர்கள் மட்டுமே கொடுத்து வந்த நிலையில் தற்போது நடிகை ஒருவர் முதன்முதலாக தனது கணக்கை தொடங்கி வைத்துள்ளார்
சிம்பு நடித்த ஈஸ்வரன், ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை நிதிஅகர்வால் தனது பங்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கியுள்ளார். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அகர்வால் ரூபாய் ஒரு லட்சம் வழங்கியதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
இதுவரை நடிகைகள் யாரும் கொரோனா தடுப்பு நிவாரண நிதி தராத நிலையில் தற்போது நிதி அகர்வால் தனது நிதியை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து நயன்தாரா த்ரிஷா உள்பட முன்னணி நடிகைகளும் தாராளமாக நிதி அளிக்க முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது