செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (08:39 IST)

சல்மான் கானின் டைகர் 3 படம் மூன்று நாளில் 240 கோடி ரூபாய் கலெக்‌ஷன்!

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் இந்தியாவில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவும். அந்த வகையில், சல்மான் கான், கத்ரினா கைப் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ஏக் தா டைகர். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிண்டா ஹாய் என்ற படம் வெளியானது. இந்த பாகமும் வெற்றி பெற்றது.

டைகர் வரிசையில் இப்போது மூன்றாவது பாகமான தற்போது சல்மான் கான், இம்ரான் ஹாஸ்மி, கத்ரினா கைப் ஆகியோர் நடிப்பில் டைகர் 3 படம் உருவாகி கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 3 நாளில் மட்டும் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வரிசையாக தோல்விப் படங்களாக கொடுத்து வந்த சல்மான் கானுக்கு டைகர் 3 படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.