சல்மான்கான் மறைத்து வைத்திருக்கும் நடிகை – யார் தெரியுமா?

salman
Last Modified புதன், 7 ஆகஸ்ட் 2019 (20:34 IST)
தபாங்-3 என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சல்மான்கான் அந்த படத்தின் நாயகியை மறைத்து வைத்து ரகசியம் காக்கிறார். செட்டுக்குள் யாரும் போன் கொண்டுவர கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியின் பிரபலமான நடிகர் சல்மான்கான். இவர் நடித்து சமீபத்தில் வெளியான “பாரத்” திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் தனது அடுத்தப்படமான “தபாங்-3”ல் நடித்து வருகிறார் சல்மான்கான்.

சல்மான்கான் போலீஸாக நடித்து 2008ல் வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த திரைப்படம் “தபாங்”. அதன் வெற்றிக்கு பிறகு சில வருடங்கள் கழித்து “தபாங்- பாகம்2” வெளியானது. ஆனால் சுமாராகவே வசூல் செய்தது. அதற்கு பிறகு வேறு பல படங்களில் சல்மான்கான் நடித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்கிறார்.

dabang

இதில் அவர் பதின்ம வயதில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறதாம். ஃப்ளாஷ்பேக் காட்சியில் இவருக்கு ஜோடியாக பழம்பெரும் இயக்குனரும், நடிகருமான மகேஷ் மஞ்ச்ரேக்கரின் மகள் சயீ மஞ்ச்ரேக்கர் நடிக்கிறார். இளம் வயது சல்மான் மற்றும் சயீ கதாப்பாத்திரங்களின் தோற்றத்தை ரகசியமாக வைத்திருக்கிறார் சல்மான்கான். இதனால் படப்பிடிப்பு ஷெட்டுக்குள் நுழைவதற்கு முன்பே அனைவரிடமும் போன்கள் பறிமுதல் செய்து கொள்ளப்படுகிறதாம்.

இது சயீ மஞ்ரேக்கர் அறிமுகமாகும் முதல் திரைப்படம் ஆகும். இதற்கு முன்னால் குழந்தை நட்சத்திரமாக அவரது அப்பா படத்தில் நடித்திருக்கிறார். சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்‌ஷி சின்ஹாவை தனது தபாங் படத்தின் மூலம் சினிமாவுக்கு முதல்முதலாக அறிமுகப்படுத்தியதும் சல்மான்கான்தான். இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் சல்மானின் இளவயது தோற்றத்தையும், சயீ மஞ்ச்ரேக்கரின் புதிய கெட் அப்பையும் காண ஆவலாய் இருக்கின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :