1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2023 (20:52 IST)

''சலார் ''படத்தின் ஓடிடி உரிமம் ரூ.200 கோடிக்கு விற்பனை!

salaar -prabash- prashanth neels
பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர்  நடிப்பில், கேஜி எஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் சலார். இப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘சலார்’ படத்தின் டீசர் கடந்த ஜூலை 6 ஆம் தேதி அதிகாலை வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின்  டீசர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 100 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.

சலார் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் இன்னும் வெளியாகாத  நிலையில், ஓடிடி வெளியீட்டு உரிமை மட்டும் ரூ.200 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.