திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 31 ஜனவரி 2021 (19:05 IST)

சாக்சி அகர்வாலின் ‘தி நைட்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: கவர்ச்சி கலக்கல்!

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாக்ஷி அகர்வால் ஏற்கனவே ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் மூன்று திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் டெடி, அரண்மனை 3 ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் சமீபத்தில் ஒப்பந்தமான திரைப்படம் தி நைட். இந்த திரைப்படத்தை ரங்கா புவனேஸ்வர் என்பவர் இயக்கி உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது ]
 
இதில் கவர்ச்சி போஸ் கொடுத்து கையில் கோடாரியுடன் இருக்கும் சாக்சி அகர்வாலின் போஸ் வைரலாகி வருகிறது. விது எனப்வர் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சாக்ஷி அகர்வால் நாயகியாகவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் 
 
இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகி வருவதாகவும் வரும் கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீசாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்