1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 3 ஜனவரி 2021 (16:43 IST)

பிக்பாஸ் சாண்டி ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

கடந்த சீசனில் பிக்பாஸ் போட்டியாளர் களில் ஒருவராக இருந்த சாண்டி, நிச்சயம் டைட்டில் வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் ஒரே ஒரு பாட்டை பாடி முகின் டைட்டிலை அடித்து கொண்டு சென்று விட்டார் 
 
இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வெல்லாவிட்டாலும் மக்களின் மனதை வென்றவர் சாண்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுவரை நடன இயக்குனராக மட்டும் இருந்த சாண்டி, தற்போது ஹீரோவாக உள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திற்கு 3.33 என்ற டைட்டில் வைக்கப்பட்டு சற்றுமுன்னர் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது
 
இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சாண்டி நடிக்க 3.33 என்ற படத்தின் டைட்டில் போஸ்டரை பார்க்கும்போது ஆக்சன் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை நம்பிக்கை சந்துரு என்பவர் இயக்க உள்ளார்