செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஜனவரி 2021 (17:13 IST)

நாயகியாகிறார் சாக்‌ஷி அகர்வால்: டைட்டில் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சாக்சி அகர்வால் ஏற்கனவே ஆர்யாவுடன் ‘டெடி’ உள்பட 5 திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் எந்த படத்திலும் நாயகியாக நடிக்கவில்லை என்ற நிலையில் தற்போது அவர் நாயகியாக நடிக்க இருக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
சாக்சி அகர்வால் நாயகியாக நடிக்கும் படத்தின் டைட்டில் ‘தி நைட்’ என அறிவிக்கப்பட்டு போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விது என்பவர் நாயகனாக நடிக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக சாக்சி அகர்வால் நடிக்க உள்ளார் 
 
ரங்கா புவனேஸ்வர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் பல புதுமுகங்கள் நடிகராகவும் தொழில்நுட்ப கலைஞராகவும் இந்த படத்தில் அறிமுகமாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை மீடியம் பட்ஜெட்டில் குட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது 
 
சாக்சி அகர்வால் ஹீரோயினாக உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் சாக்சி ஆர்மியினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சாக்சி அகர்வால் தொடர்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்