1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (10:25 IST)

ராகவா லாரன்ஸ் படத்துக்கு இயக்குனராகும் தயாரிப்பாளர் – திடீர் முடிவு!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தை தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் கதிரேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்போது அதிரடி மாற்றமாக இந்த படத்தை படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திடீர் முடிவுக்குப் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.