ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (20:50 IST)

'பரியேறும் பெருமாளுக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்

'கபாலி', 'காலா' படங்களை இயக்கிய பின்னர் கோலிவுட் திரையுலகில் பிரபலம் ஆகிவிட்ட இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. ஒடுக்கப்பட்டவர்களின் வலியை பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கோலிவுட் திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், 'மக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு என் வாழ்த்துக்கள். நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று தயாரிப்பாளர் பா.ரஞ்சித் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகிய இருவரையும் தனது அலுவலகத்திற்கு அழைத்து நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார் கமல்.

இந்த சந்திப்பு குறித்து பா.ரஞ்சித் தனது டுவிட்டரில், 'பரியேறும்பெருமாள் திரைப்படத்தை விரும்பி கேட்டு பார்த்து பாராட்டிய உயர்திரு கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி, பெரும் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இந்த படத்தை பார்த்து பாராட்டிய தோழர் திரு.ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கும் ரஞ்சித் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.