திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (07:39 IST)

மோசடி அழைப்பு என்று நினைத்தேன்… பிரேமம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்புக் குறித்து பகிர்ந்த சாய்பல்லவி!

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றி அவரை தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமானார். அதையடுத்து தமிழில் தியா, என் ஜி கே, கார்கி மற்றும் மாரி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.  முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்நிலையில் அவர் கடந்த காலங்களில் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய பட்ங்களில் நடிக்க மறுத்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படங்களின் கதை அவருக்கு சென்ற போது, அதில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று சொல்லி அவர் நிராகரித்து விட்டார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. அதே போல கிளாமர் வேடங்களில் நடிக்க மறுத்ததாலும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது.

தற்போது அவர் நடிப்பில் வெளியாகவுள்ள அமரன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் அவர், பிரேமம் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்புக் குறித்து பேசியுள்ளார். அதில் “முதலில் பிரேமம் படத்தில் நடிக்க அல்போன்ஸ் புத்ரன் அழைத்த போது நான் நம்பவில்லை. யாரோ பிரான்க் கால் செய்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் என்னைப் பற்றி கூகுளில் தேடிப் பாருங்கள் என்று சொன்னதும்தான், உண்மை என நம்பி பேச ஆரம்பித்தேன்” எனக் கூறியுள்ளார்.