செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2017 (21:48 IST)

“விஜய் அண்ணா எப்போதும் இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவதில்லை” - சிபிராஜ்

‘விஜய் அண்ணா எப்போதும் இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவதில்லை’ என சிபிராஜ் கூறியுள்ளார்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘சத்யா’. இந்தப் படத்தில் சிபிராஜ் ஹீரோவாகவும், ரம்யா  நம்பீசன் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடித்திருப்பதால், தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதன் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது.
 
அதில் பேசிய சிபிராஜ், “பத்திரிகையாளர் ஷோ முடிந்த பின்னர் அனைவரும் என்னுடைய நடிப்பை பற்றியும், படத்தை பற்றியும்  என்ன சொல்வார்கள் என்று பயத்தோடு இருந்தேன். அனைவரும் பாசிடிவாக கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  என்னுடைய நடிப்பை கேலி செய்து படத்தில் ஒரு வசனம் வரும். ஆனால் படத்தை ரசிகர்கள் அனைவரும் பார்த்து முடிக்கும் போது அனைவரும் என்னுடைய நடிப்பை பாராட்டினார்கள். ஒவ்வொரு விமர்சனமும் என்னை ஊக்குவிக்கும் வகையில்  இருந்தது. 
 
தெலுங்கில் ‘ஷணம்’ படத்தை எழுதி நடித்த ஆத்விஷேஷ் இங்கு வந்துள்ளார். ஆத்விசேஷ் தெலுங்கில் நடித்த ‘ஷணம்’ படத்தை நாங்கள் தமிழில் ரீமேக் செய்திருந்தோம். வருங்காலத்தில் அவர் தெலுங்கில் நடிக்கும் படத்தை தமிழில் நான் ரீமேக்  செய்யும் ஆவலில் இருக்கிறேன். அதேபோல் நான் தமிழில் நடிக்கும் படத்தை அவர் தெலுங்கில் ரீமேக் செய்வேன் என்று  கூறியுள்ளார். 
 
ஆத்விசேஷும் நானும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளோம். எனக்கும் தெலுங்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. விஜய் அண்ணா ‘சத்யா’ படத்துக்கு நல்ல விமர்சனம் வருவதை பார்த்து, என்னை போனில்  அழைத்து பாராட்டினார். மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் விஜய் அண்ணா எப்போதும் இளைஞர்களை ஊக்குவிக்க  தவறுவதில்லை” என்றார்.