திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2017 (22:05 IST)

அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதியின் திடீர் விசிட்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுத்துவரும் நிலையில் ஒரு ஆண்டுக்கு பின்னர் மீண்டும் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முரசொலி பத்திரிகை அலுவலகத்திற்கு சென்ற கருணாநிதி அங்கிருந்த கண்காட்சியையும், புகைப்படங்களையும், பார்த்தார். அதன்பின்னர் எங்கும் வெளியே செல்லாமல் இருந்த கருணாநிதி இன்று திடீரென அண்ணா அறிவாலயம் வருகை தந்தார்.

கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதாகவும், விரைவில் அவர் பேசும் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த அதிடீர் விசிட் திமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. மேலும் கடைசி கட்டத்தில் ஆர்.கே.நகருக்கு அவர் செல்ல வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் இது உண்மையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்