திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (09:03 IST)

என்னிடம் சிகிச்சைப் பெற யாரும் வரமாட்டார்கள் – சாய்பல்லவி கவலை !

நடிகை சாய்பல்லவி தான் படித்த டாக்டர் படிப்பை மேற்கொள்ள முடியாதது குறித்து பதில் அளித்துள்ளார்.

நடிகை சாய்பல்லவி பிரேமம் மலையாளப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த கேரள மற்றும் தமிழக சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். அதையடுத்து அவர்  நடித்த சில படங்கள் வெற்றிப் பெறாவிட்டாலும் அவருக்கான க்ரேஸ் இன்னும் குறையாமல் உள்ளது.

இதையடுத்து இப்போது அவர் நடிப்பில் என்.ஜ்.கே படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். மே 31 ஆம் தேதி இந்தப் படம் வெளியாவதை அடுத்து படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் இப்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சாய்பல்லவியிடம் அவர் படித்த மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் போனது குறித்துக் கேள்வி எழுப்பியபோது ‘நான்  இப்போதெல்லாம் பிராக்டிஸ் செய்ய மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை. என்னிடம் இருந்த சில திறமைகள் என்னை விட்டு போவதை உணர்ந்திருக்கிறேன். நான் இப்போது மருத்துவமனைக்கு சென்றால் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் யாரும் நான் தரும் மருத்துவ சீட்டை வாங்கமாட்டார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.