1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (14:37 IST)

இன்றைய ரிலீஸ்களில் பாஸிட்டிவ் விமர்சனத்தைப் பெறும் சாய்பல்லவியின் ‘கார்கி’

சாய்பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை சமூகவலைதளங்களில் பெற்று வருகிறது.

இன்று ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் கார்கி, இரவின் நிழல் மற்றும் மை டியர் பூதம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த மூன்று படங்களும் வேறு வேறு ஜானர்களில் வெளியாகியுள்ளன. மை டியர் பூதம் குழந்தைகளைக் கவரும் பேண்டசி ஜானரில் வந்துள்ளது. இரவின் நிழல் திரைப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக வெளியாகியுள்ளது. கார்கி சாய்பல்லவி நடிப்பில் கோர்ட் ரூம் ட்ராமா வகையான படமாக வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த மூன்று படங்களும் வெளியான நிலையில் சாய்பல்லவியின் கார்கி பரவலாக நேர்மறையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.