1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 மே 2024 (09:05 IST)

விளம்பரத்தில் நடிக்க 2 கோடி.. நச்சரித்த நிறுவனம்! No சொன்ன சாய்பல்லவி! – ஏன் தெரியுமா?

பிரபல நடிகையான சாய்பல்லவி அழகுபொருள் தயாரிப்பு நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. பிரேமம் படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி சிறந்த டான்ஸரும் கூட. தொடர்ந்து இவர் நடித்த மாரி 2, ஷ்யாம் சிங்கா ராய் என பல படங்களும் ஹிட் அடித்துள்ளன.

பிரபலமான நடிகர், நடிகைகளை பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்வதற்கான விளம்பர படத்தில் நடிக்க வைப்பது வழக்கம். இதற்காக ஒரு படத்தில் அவர்கள் நடிப்பதற்கு அளிக்கப்படும் சம்பளத்தை சில மணி நேர விளம்பர ஷூட்டிங்கிற்கே நிறுவனங்கள் தருவதால் பலரும் விளம்பர படங்களில் நடிக்கின்றனர்.

அவ்வாறாக சமீபத்தில் ஒரு அழகுபொருள் தயாரிப்பு நிறுவனம் தங்களது விளம்பர படத்தில் நடிப்பதற்காக ரூ.2 கோடி தருவதாக சாய் பல்லவியிடம் பேசியுள்ளனர். சாய் பல்லவி பொதுவாகவே செயற்கையான அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதை விரும்புபவர் இல்லை. சினிமாவிலும் தேவைப்படும் சமயங்கள் தவிர கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு மேக்கப் இல்லாமலே நடிக்க விரும்புபவர். அதனால் அந்த விளம்பர படத்தை நடிக்க அவர் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பணம் கொடுத்தால் மோசடி நிறுவனங்களுக்கு கூட விளம்பரம் செய்து கொடுக்கும் இந்த காலத்திலும் சாய் பல்லவி தனது கருத்துக்கு எதிரான விளம்பரத்தில் நடிப்பதில்ல்லை என்று எடுத்த முடிவை பலரும் பாராட்டியுள்ளனர்.

Edit by Prasanth.K