திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (16:20 IST)

திடீரென தள்ளி வைக்கப்பட்ட இயக்குனர் ஷங்கர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி?!

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் கடந்த ஆண்டு நடந்தது. அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் எளிமையாக நடத்தப்பட்டது.

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் கடந்த ஆண்டு  ஜூன் 27ஆம் தேதி  நடைபெற்றது. இந்த திருமணம் இன்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இன்று நடைபெற்றது. அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் இந்த திருமணத்தில் முக்கிய நபர்கள் 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக கொண்டாட ஷங்கர் குடும்பம் திட்டமிட்டது. அதையடுத்து திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார் ஷங்கர். ஆனால் இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சி இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் எனன் என்று தெரியவில்லை.

Source valaipechu