1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (15:40 IST)

ரத்த காயங்களுடன் மிரட்டலான "சாணிக் காயிதம்" போஸ்டர் ரிலீஸ்!

சில வாரங்களுக்கு முன்னால் இயக்குனர் செல்வராகவன் தான் ஒரு படத்தில் நடிக்கபோவதாக அறிவித்த போதே அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. செல்வராகவன் போன்ற தேர்ந்த இயக்குனரை தன் கதையின் மூலம் நடிக்க சம்மதிக்க வைத்த அந்த இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. 
 
அந்த இயக்குனர் இதற்கு முன்னர் ராக்கி என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் என அறிவிக்கப்பட்டது. சாணிக்காயிதம் என்ற இந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாகவும் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். 
 
தீபாவளி அன்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இன்று செல்வராகவனின் பிறந்தநாள் முன்னிட்டு படக்குழு மிரட்டலான புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.