சுல்தான் படத்தின் ரிலீஸ்… அதிரடி முடிவு எடுத்த எஸ் ஆர் பிரபு!
சுல்தான் படத்தினை சொந்தமாக தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யவுள்ளாராம் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு.
எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை தமிழகம் முழுவதும் சொந்தமாக ரிலீஸ் செய்ய உள்ளாராம் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. விநியோகஸ்தர்களுக்கும் எஸ் ஆர் பிரபுவுக்கும் இடையே சில பிரச்சனைகள் இருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.