திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 மார்ச் 2021 (21:45 IST)

பிக்பாஸ் புகழ்....நடிகர் கவினுக்கு உதவிய 6 இயக்குநர்கள்....

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் கவின். இவர் பிக்பாஸ் 3 வது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

பின்னர் நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதையடுத்து இயக்குநர் வினீத் இயக்கத்தில் லிப்ட் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாஅக அம்ரிதா நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களான, வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், விக்னேஷ் சிவன், அஜய் ஞானமுத்து, ரவிக்குமார் போன்றோர் இதை வெளியிட்டுள்ளனர். லிப்ட் பட ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.