1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (15:48 IST)

இளம் நடிகர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா!

அனுஷ்கா நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார்.

ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பின்னர் அவர் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிலும் தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனான ஜதி ரத்னலு பட புகழ் நவீன் பொலிஷிட்டி நாயகனாக நடிக்க உள்ளாராம். அனுஷ்காவை விட 8 வயது இளையவரான அவருக்கு படத்தில் ஜோடியாக நடிக்கவில்லையாம் அனுஷ்கா. ஆனால் கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரமாம்.