1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:25 IST)

ரெமோ, சுல்தான் படங்களின் இயக்குனர் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா!

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் கார்த்தி நடித்த சுல்தான் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன். இரண்டு படங்களுமே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு உருவானாலும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை.

இதனால் சுல்தான் படத்துக்குப் பிறகு அடுத்த பட வாய்ப்புக் கிடைக்காமல் இருந்து வந்தார் பாக்யராஜ் கண்ணன். இந்நிலையில் இப்போது அவர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

எஸ் ஜே சூர்யா இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் பிஸியான வில்லன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கதாநாயகனாகவும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.