1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (13:20 IST)

மகா கேவலமான புத்தி கொண்ட விஜய்யின் தந்தை கைது செய்ய வேண்டும் - சொன்னது யாருன்னு பாருங்க!

நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குனருமாகிய SA சந்திரசேகர் கோலிவுட்டில் பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கொடி, டிராஃபிக் ராமசாமி போப்பிடற படங்களிலில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரமெடுத்துள்ள SA சந்திரசேகர் "கேப்மாரி " என்ற மோசமான அடல்ட் காமெடி படத்தை இயக்கியுள்ளார். 
 
இந்த படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதுல்யா, வைபவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இரட்டை அர்த்தம், முகம் சுளிக்கும் வகையில் முத்தம் காட்சிகள் என அத்தனையும் அடங்கியுள்ள இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகி மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இந்த படத்தை எதிர்த்தும், சமூகத்தை சீரழிக்கும் வகையில் இப்படி ஒரு படத்தை எடுத்த இயக்குனர் கைது செய்யப்படவேண்டும் என்று திரையரங்க உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கட்டமாக பேட்டி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, எஸ். ஏ சந்திரசேகர் படத்தை பார்த்தேன். டைட்டிலுக்கு ஏத்த மாதிரியே தான் படமும் இருக்கு. இவங்கல்லாம் வந்து எப்படி அரசியல் பற்றி பேசுறாங்கங்கனே தெரியல.. படத்தோட ஸ்கிரிப்ட் , டயலாக் visual அத்தனையும் மகா மட்டமா ...மகா கேவலமா இருக்கு.  இப்படி ஒரு படத்தை எடுத்தற்காக எஸ்ஏசியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தாலும் தப்பில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து..இதற்காக அரசாங்கத்திடம் கூட கோரிக்கை வைக்கலாம் என அவர் காட்டமாக கூறியுள்ளார்.