செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 12 டிசம்பர் 2019 (14:37 IST)

இந்த ஒரு நாளுக்காக 25 வருடம் காத்திருந்தேன் - பொங்கும் புது மாப்பிள்ளை!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களுள் முக்கிய நடிகரான சதிஷ் விஜய் , சிவகார்த்திகேயன் , விஷால் , விஜய் சேதுபதி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 படத்தில் இணைந்திருக்கிறார். 
 
சமீபத்தில் தான் சதீஷ் ’சிக்சர்’ பட இயக்குநரின் தங்கை சிந்துவை திருமணம் செய்துகொண்டார். நேற்று இவர்களது திருமண வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 
 
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்கவிருப்பதை கூறிய சதிஷ்,  "கடந்த 25 வருடங்களாக இந்த ஒரு நாளுக்காகத்தான் ஏங்கி கொண்டிருந்தேன். என்னுடைய திருமணம் நடந்ததை பற்றி கூறுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். "தலைவர் 168" படத்தில் நடிப்பதை பற்றி கூறுகிறேன். இப்படி ஒரு நாளுக்காக நான் பல நாட்கள் ஏங்கியிருக்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்த சிறுத்தை சிவா, கலாநிதி மாறன் மற்றும் தலைவர் சூப்பர் ஸ்டார் ஆகியோருக்கு நன்றி. என் திருமண தினத்தில் இதை விட பெரிய திருமண பரிசு வேறெதுவும் இருக்க முடியாது  என கூறி மகிழ்ந்தார்.