திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (17:24 IST)

பிரபல இயக்குனர் இறந்துவிட்டதாக வதந்தி – உண்மையை வெளியிட்ட நடிகர்!

நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான எவனோ ஒருவன் படத்தின் இயக்குனர் நிஷிகாந்த் காமத் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை நடிகர் மிலாப் ஜாவேரி மறுத்துள்ளார்.

இந்தி சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் நிஷிகாந்த் காமத். இவர் திரிஷ்யம் மற்றும் காக்க காக்க ஆகிய படங்களின் இந்தி ரீமேக்கை அங்கு இயக்கியவர். அதுமட்டுமில்லாமல் தமிழில் மாதவன் நடித்த எவனோ ஒருவன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று திடீரென அவர் இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் அவரது நண்பரும் நடிகருமான மிலாப் ஜாவேரி அதை மறுத்துள்ளார். மருத்துவமனையில் நிஷிகாந்துடன் இருக்கும் நபரிடம் பேசியதாகவும், அவர் இன்னும் இறக்கவில்லை என்றும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.