திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (17:14 IST)

என் முதல் பாடியவர் என் கடைசி பாடலையும் பாடவேண்டும் – கவிஞர் வைரமுத்து உருக்கம்

தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரிய கவிஞர் வைரமுத்து. இவ நிழல்கள் என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

இந்நிலையில், கடந்த வாரத்தில் எஸ்.பி.பி. குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. ஆனால் மருத்துவர் நிர்வாகம் அவர் ஐசியுவில் இருப்பதாகத் தெரிவித்தது.

இந்நிலையில், பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை நேற்று இருந்தது போலவே சீராக உள்ளது என அவரது மகன் சரண் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

எஸ்பிபி குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருந்ததாவது :

எஸ்.பி.பி. குணமாகி மீண்டு வர வேண்டும். என் முதல் பாடலைப் பாடியவரே என் கடைசிப் பாடலையும் எஸ்.பி.பி பாட வேண்டும். 40 ஆண்டுகளாக மாறாதா மகா கலைஞர் எஸ்.பி.பி., இந்த உலகிற்கு இன்பம் மட்டுமே கொடுத்தவர் எஸ்பிபி என்று பாடல் பாடி வைரமுத்து உருக்கமாக இந்த வீடியோ வெளியிட்டுள்ளார்.