வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (14:03 IST)

நடிகை திரிஷா பற்றிய திருமண வதந்தி....

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை திரிஷா. இவர், முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து,  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய்யுடன் இணைந்து இவர் லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில்  திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

நடிகை திரிஷாவுக்கு 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுகுறித்து அவர், தன்   சினேகிதர்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்றுப் பிரிந்ததது தெரிய வந்தது. எனவே என்னோடு இணைந்து பயணிப்பவரை நான் திருமணம் செய்வேன் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், திரிஷா திருமண உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து ரசிகர்கள் அவர் திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர். இதை திரிஷா மறுத்துள்ளார்.