ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (17:43 IST)

ஒரே வாரத்தில் ரூ.710 கோடி வசூல்: ஆர்.ஆர்.ஆர் செய்த சாதனை!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படம் ஒரே வாரத்தில் 710 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் ஆயிரம் கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஒரே நாளில் 100 கோடியும் 3 நாட்களில் 300 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது எட்டு நாட்களில் ரூ 710 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த படத்திற்கு கூட்டம் இன்னும் குறையவில்லை என்பதால் ஒரு சில நாட்களில் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ரூ.550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஏற்கனவே 350 கோடி சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் விற்பனை செய்துள்ள நிலையில் தற்போது 710 கோடி வசூல் ஆகி இருப்பதால் இப்போதே ஆயிரம் கோடி மொத்த வசூல் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது