திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (17:14 IST)

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5551 கோடி சொத்துகள் முடக்கம்

xiomi
அந்நிய  நிறுவனத்தின் ரூ.5551 கோடி சொத்துகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயப்பட்டு வரும் முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனம் சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம்.  இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.34,000 கோடி வருமானம்  ஈட்டிவரும் நிலையில், இதில் பெரும்பானையை சீனாவின் உள்ள தலைமை நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது.

 இந்த  நிறுவனத்தின்  உற்பத்தியாளர்களுக்கு ஜியோமி நிறுவனம் தொழில் நுட உள்ளீடு , மென்பொருள் தொடர்பான உதவிகள் செய்யவில்லை என வும், ஆனால், சேவை வழங்காத மூன்று வெளி நாட்டு  நிறுவனங்களுக்கு பணம் பறிமாற்றம் செய்துள்ளது. இப்பணத்தைச் செலுத்தும்போது, வங்கிகளுக்கு தவறான தகவல் தெரிவித்துள்ளது.

எனவே,சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக  விசாரணைக்குப் பிறகு, அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999ன் கீழ்  ஜியோமியின்ரூ. 5551.27 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.