செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (15:24 IST)

முதல் நாளில் ரூ.200 கோடி வசூலுக்கு வாய்ப்பு: ஆர்.ஆர்.ஆர். குறித்த ஆச்சரிய தகவல்

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நாளை முதல் நாளில் ரூபாய் 200 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்தியாவில் மட்டும் இந்த படம் 5000 திரையரங்குகளில் வெளியாகிறது என்றும்,  எனவே நாளை இந்த படம் 100 முதல் 120 கோடி வரை வசூல் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
அதேபோல் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் வெளிநாடுகளில் இந்த படம் 80 கோடி ரூபாய் வசூல் ஆகும் என்று கூறப்படுகிறது
 
எனவே நாளை முதல் நாளில் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூலித்தாலும் எந்தவித ஆச்சரியமும் இருக்காது என்று டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன