‘வலிமை’ வசூல் எத்தனை கோடி: போனிகபூர் அதிகாரபூர்வ அறிவிப்பு!
அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் இந்த படம் நாளை மறுநாள் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வலிமை திரைப்படம் ஏற்கனவே 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் வசூல் குறித்து பதிவு செய்து உள்ளார்
அதில் வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் இன்னும் வசூல் செய்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து வலிமை 200 கோடி வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது