1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (17:54 IST)

’ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் ஒத்திவைப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடித்த ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் கோடிக்கணக்கில் செலவு செய்து புரமோஷன் பணிகள் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் திடீரென தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் படக்குழுவினரின் மூலம் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்
 
இருப்பினும் புதிய ரிலீஸ் தேதி குறித்து அவர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை என்றும் விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது