வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (09:30 IST)

ஆஸ்கர் கேட்ட ராஜமௌலிக்கு கிடைத்த புதிய விருது! – ஆர்.ஆர்.ஆர் ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஆஸ்கர் விருது விழாவில் தீவிரமாக களமாடி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு புதிய விருது கிடைத்துள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது.

இந்தியாவிலிருந்து ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட உள்ள படத்திற்கான தேர்வில் ஆர்.ஆர்.ஆர் படமும் இருந்தது. ஆனால் இந்தியா சார்பில் அந்த படம் அனுப்பப்படவில்லை. இதனால் ஆர்.ஆர்.ஆர் ஸ்பெஷல் நாமினேசனில் அப்ளை செய்து ஆஸ்கருக்குள் அனைத்து கேட்டகரியிலும் நுழைந்து தீவிரமாக போட்டி போட்டு வருகிறது.

ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த பல ஹாலிவுட் பிரபலங்களும், திரைப்பட விமர்சகர்களும் கூட ஆர்.ஆர்.ஆர் படத்தை மிகவும் புகழ்ந்துள்ளனர். ஆஸ்கர் விருது போட்டியில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக ஆர்.ஆர்.ஆர் உள்ளது.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு புதிய விருது கிடைத்துள்ளது ஹாலிவுட் க்ரிட்டிக்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு அதிகம் கவனம் பெற்ற படம் என்பதற்கான ஸ்பாட்லைட் அவார்டை ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு வழங்கியுள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எப்படியும் ஒரு ஆஸ்கராவது வாங்காமல் ராஜமௌலி வரமாட்டார் என பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit By Prasanth.K