செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (17:22 IST)

ரிலிஸுக்கு முன்னே இத்தனை கோடி வியாபாரமா? ஆர் ஆர் ஆர் பட சாதனை!

ஆர் ஆர் ஆர் படம் ரிலிஸூக்கு முன்பே இதுவரை 900 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாம்.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.

இந்த படம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ரிலீஸுக்கு முன்னரே கிட்டத்தட்ட 890 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாம். இது இந்திய அளவில் மிக அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாக சாதனைப் படைத்துள்ளதாம்.