திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (16:03 IST)

ஆர் ஆர் ஆர் அடுத்த அப்டேட்… ஆலியா பட் கதாபாத்திரம் வெளியீடு!

ஆர் ஆர் ஆர் படத்தில் ஆலியா பட் நடிக்கும் சீதா கதாபாத்திரம் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.

இந்நிலையில் முதல்முறையாக படத்தில் ஆலியா பட் நடிக்கும் சீதா என்ற கதாபாத்திரத்தின் புகைப்படத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ராமராஜ் மற்றும் பீம் ஆகிய கதாபாத்திர போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.