திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 மே 2021 (00:10 IST)

பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் உதய நிதி

பிரபலநடிகரும், சேப்பாக்கம் –திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவது தம்பி அருள் நிதி இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

நடிகர் உயதநிதி ஸ்டாலின் தற்போது ஆர்டிக்கில் 15, கண்ணை நம்பாதே, ஏஞ்சல், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் பல வித்தியாசமாக கதைகளைத் தேர்வு செய்து நடிகர் அருள் நிதி நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகர் அருள் நிதியும், உதயநிதியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை இயக்குநர் பாலா இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இதனால் இரு ஹீரோக்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.