செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 10 ஜனவரி 2019 (10:42 IST)

தனுஷுடன் 'பேட்ட' படம் பார்த்த த்ரிஷா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் இன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. பெரும்பாலான ஊடகங்கள் இந்த படத்திற்கு 3.5 ஸ்டார் கொடுத்து கொண்டாடி வருவதால் ரஜினிக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக இந்த படம் கருதப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் ஒவ்வொரு படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வழக்கம் உடைய நடிகர் தனுஷ், இன்று சென்னை கோயம்பேடு அருகில் உள்ள ஒரு திரையரங்கில் 'பேட்ட' படத்தை குடும்பத்தினர்களுடன் பார்த்தார். அதே திரையரங்கில் த்ரிஷாவும் 'பேட்ட' படத்தை பார்த்து ரசித்தார். இருவரும் அருகருகே அமர்ந்து பேட்ட படத்தை பார்த்தனர். த்ரிஷா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்த்த தனுஷ், மாஸ் காட்சிகள் வரும்போது விசிலடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இடைவேளையின்போது தனுஷ் மற்றும் ரஜினியுடன் பல ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.