மாதவன் நடித்த ராக்கெட்ரி… பிரபல ஓடிடியில்… ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் மாதவன் நடிப்பில் உருவான ராக்கெட்ரி திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்தார் மாதவன். சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. கேன்ஸ் விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆனது. திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. பேன் இந்தியா ரிலீஸ் என்பதால் பெரிய அளவில் நஷ்டம் இருக்காது என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜுலை 26 ஆம் தேதி ஐந்து மொழிகளில் அமேசான் ப்ரைம் தளத்தில் ராக்கெட்ரி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.