1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (15:09 IST)

நடிகர் மாதவன் மகன் புதிய சாதனை..குவியும் பாராட்டுகள்

VEDHANTH
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் அறிமுகம் ஆனவர் மாதவன். அதன்பின், பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் பல  ஹிட் படங்களைக் கொடுத்து, பாலிவுட்டிலும் கால்பதித்து சாதித்தார்.

இவரது மகன்  வேதாந்த்து சினிமாவில் நடிக்க வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, இவர் தன் ம்கனை நீச்சல் போட்டிகளில் சர்வதேச அளவில் கலந்துகொள்ள ஊக்குவித்து பல பரிசுகள் வெல்ல வைத்தார்.

இந்த நிலையில், வரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வேண்டி குடும்பத்துடன் அங்கு தங்கி வேதாந்துக்கு பயிற்சி அளித்து வருகிறார் மாதவன்.

இ ந் நிலையில், வேதாந்த் தேசிய அளவிலான  நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு புதிய சாதனை படைத்துள்ளார். புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் தேசிய அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. இதில், 1500 மீட்டர் பிரிவில் கலந்துகொண்ட வேதாந்த், தன் முந்தையை சாதனையாக 16:06:43 என்பதை 16:01:73 என்ற அளவில் முறியடித்திருக்கிறார் என்று மாதவன் தனது சமுகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.