இதனால்தான் ரோபோ சங்கர் இப்படி இளைத்தாரா? சோகமான செய்தி!
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். இவரது வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகர்களோடு நடித்து, தற்போது பிரபலமாக உள்ள ரோபோசங்கர், ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கினார்.
நல்ல அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ரோபோ சங்கர் சமீபகாலமாக உடல் எடை மிகவும் குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார். அவருக்கு மஞ்சள் காமாலை வந்து கல்லீரல் பாதிக்கப்பட்டதே காரணம் என சொல்லப்படுகிறது. ரோபோ சங்கர் ஒரு அசைவ உணவுப்பிரியர் மற்றும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். இதனாலும அவரின் கல்லீரல் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்போது அவர் குணமடைந்து வருவதாக தகவல்கள் வாங்கியுள்ளன.