காரை உரசிய முதியவரை சரமாரியாக அடித்த ’திமுக பிரமுகர் ’

dmk
Last Modified புதன், 15 மே 2019 (18:30 IST)
சென்னையில் உள்ள கிரீம்ஸ்  சாலை சுதந்திரா நகரில் வசித்து வருபவர் மாணிக்கம். இவர் திமுகவின் ஆயிரம்விளக்கு பகுதியில் கழக அமைப்பாளராக  இருந்து வருகிறார்.
இவரது மனைவி பெயர் செல்வி. வரும் உள்ளாட்சி தேர்தலில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
 
இன்று கிரீம்ஸ் சாலையில் தனது காரை நிறுத்திவைத்துள்ளார். அப்போது அந்த வழியாக ஒரு முதியவர் வரும்போது காரை உரசியதாகத் தெரிகிறது. இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த மாணிக்கத்தின் பெற்றோர், அவரது மனைவி செல்வி, உடன் இருந்த சகோதரர் எல்லோரும் ஒன்றுசேர்ந்து கையில் கிடைத்த மரப்பலகையால் கடுமையாகத் தாக்கினர்.
 
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக பிரம்ஜுகர் ஒரு பியூட்டி பார்லரில் ஒரு பெண்ணை எட்டி உதைத்ததும், விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடையில் திமுக பிரமுகர் யுவராஜ் கடை ஊழியர் தாக்குதல் நடத்தியதும் தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஒரு முதியரை,  கண் மண் தெரியாமல், வயது வித்தியாசம் பார்க்காமல் இப்படி அடித்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. 
dmk
இந்த தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :