திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (09:34 IST)

பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்! உறுதி செய்த மனைவி

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ஆம் தேதி முதல் தாய்லாந்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது புதிய நட்சத்திரங்கள் இணைந்து கொண்டே இருக்கின்றனர்
 
ஏற்கனவே இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, ஜெய ராம், லால், சரத்குமார் உள்பட பலர் இணைந்து உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு புதுவரவாக இந்த படத்தில் பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகரான ரியாஸ்கான் இணைந்துள்ளார்
 
ரியாஸ்கான் இந்த படத்தில் நடிக்க இருப்பதை அவரது மனைவி நடிகை உமா ரியாஸ்கான் பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். வரும் ஜனவரி 7 ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும், ரியாஸ்கான் கேரக்டர் கிஷோர் கேரக்டருடன் இணைந்து படம் முழுவதும் வரும் கேரக்டர் என்றும், முதன்முதலாக தனது கணவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
 
ரியாஸ்கான் அடுத்து இன்னும் யாரெல்லாம் இந்த படத்தில் இணைய உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்