திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (08:46 IST)

பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைந்த விஷால் பட நடிகர்!

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்க பிரபல இயக்குனர் மணிரத்னம் கடந்த சில மாதங்களாக ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த படத்தில் வந்தியத் தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம்ரவியும் நடிக்கவுள்ளனர். மேலும் முக்கிய கேரக்டர்களில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், திரிஷா, அமிதாப் பச்சன் உள்பட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்திற்காக அனைத்து நடிகர்களும் தலைமுடியை நீளமாக வளர்த்து தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 15ஆம் தேதி தாய்லாந்து நாட்டில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல மலையாள நடிகர் லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த ’சண்டக்கோழி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி சமீபத்தில் விலகிய நடிகர் சத்யராஜூக்கு பதில் லால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மேலும் சில முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த செய்திகள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தை இரண்டு பாகங்களாக லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது