திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (06:32 IST)

ரஜினி படத்தில் நடிக்க இருப்பதால் கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆனார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த படத்தில் அவர் கமிட்டானதால் அவர் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமான மணிரத்தினம் இயக்கிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தாய்லாந்து நகரில் தொடங்கியது. கார்த்தி மற்றும் ஜெயம் ரவி உள்பட பல நடிகர்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யாராய் உள்பட பல முன்னணி கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்கள்
 
இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டு, பொன்னியின் செல்வன் படத்திற்கு கொடுத்த கால்ஷீட் தேதிகளை அவர் ’தலைவர் 168’ படத்திற்கு கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் கேரக்டருக்கு கேரக்டரில் நடிக்க வேறு நடிகையை மணிரத்னம் பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது